கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பீளமேடு போலீசார் 3 பேர் கும்பலை தேடிவந்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி தப்பியோட முயன்றபோது, குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் காலில் சுட்டுப்பிடித்தனர். மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி, பணியில் இருந்தபோது இறந்த போலீஸ்காரரின் மகள் ஆவார்.