கோவையில் 19 வயது கல்லூரி மாணவியை மூவர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட வானதி சீனிவாசன், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.