பேரூர் அருகே உள்ள தித்திபாளையம் என்.ஜி. நகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், மரத்தின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை நேற்று பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.