கோவை: சமூக நலத்துறை அலுவலக ஊழியர் தற்கொலை

85பார்த்தது
கோவை: சமூக நலத்துறை அலுவலக ஊழியர் தற்கொலை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த டைப்பிஸ்ட் சுகன்யா (வயது 28) நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் சனப்பிரட்டியை சேர்ந்த இவர், கோவை அவினாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். 

நேற்று காலை நீண்ட நேரமாக அவரது அறை பூட்டியே கிடந்தது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, மின்விசிறியில் சுகன்யா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சுகன்யாவின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுகன்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி