கோவை: ஆதார் செல்போன் எண் மாற்றத்திற்கு சிறப்பு முகாம்!

1பார்த்தது
கோவை: ஆதார் செல்போன் எண் மாற்றத்திற்கு சிறப்பு முகாம்!
கோவை கோட்டத்துக்கு உட்பட்ட தபால் நிலையங்களில் ஆதார் அட்டையில் செல்போன் எண் மாற்றம் மற்றும் புதிய எண் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகின்றன. மேலும், அஞ்சலக சேமிப்பு கணக்குகளுடன் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகளை இணைக்கும் முகாமும் நடக்கிறது. இதன் மூலம் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலாண்டிபாளையம் அஞ்சலகம் இந்த சேவையில் முன்னோடியாக செயல்பட்டு வருவதாக கோட்ட கண்காணிப்பாளர் பனோத் நந்தா தெரிவித்துள்ளார்.