கோவை, பெ. நா. பாளையம் அருகே இடிகரை பகுதியில் சாலை கடக்க முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் (59) மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டிய மயில்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.