கோவையைச் சேர்ந்த 16 வயது எஸ்.எஸ்.எல்.சி. மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கரூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. காதலுக்காக வீட்டை விட்டு சென்றார். பெற்றோரின் கண்டிப்பால் காதலனுடன் செல்ல முடிவு செய்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். அவரை தேடிய போலீசார், திருப்பூர் அருகே பஸ் பழுதானதால் மாணவி கோவை திரும்புவதை அறிந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மீட்டனர். பின்னர் மாணவிக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.