கோவை; சினிமா படப்பிடிப்பில் துணை நடிகர் மயங்கி விழுந்து சாவு

66பார்த்தது
கோவை; சினிமா படப்பிடிப்பில் துணை நடிகர் மயங்கி விழுந்து சாவு
கோவை மருதமலை அடிவாரத்தில் மலையாள சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'பக்தி' என்ற இந்த படத்தின் படப்பிடிப்பு நாளையுடன் முடிவடைகிறது. படத்தில் நடித்து வரும் துணை நடிகர்கள் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கியிருந்தனர். இங்கு கேரளா மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திருப்பளூர் பகுதியைச் சேர்ந்த ஹரிதாசன் (39) என்பவரும் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவரை சக துணை நடிகர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.