மேட்டுப்பாளையம் அருகே வனபத்ரகாளியம்மன் கோவிலின் படித்துறையில் அமைந்துள்ள பம்ப் ஹவுஸ் அருகே பவானி ஆற்றின் கரையோர பகுதியில் பெண் ஒருவரின் பிணம் நேற்று (ஜூன் 11) கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவலைப் பெற்ற மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிணத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவருக்கு சுமார் 60 முதல் 65 வயது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரின் அடையாளம் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.