கோவை - ஜோலார்பேட்டை தடத்தில், வந்தே பாரத் ரயில்களின் வேகம் மணிக்கு 110 கி.மீ. இலிருந்து 130 கி.மீ. ஆக அதிகரிக்க தண்டவாள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் கட்ட சோதனை ஓட்டம் கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் கட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நாளை காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கோவை முதல் ஜோலார்பேட்டை வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.