கோவை: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்; ஆட்சியர் தகவல்

81பார்த்தது
கோவை: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்; ஆட்சியர் தகவல்
கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வைட்டமின் ஏ உயிர்ச்சத்து உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து என்று கூறப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி, தோல், திசு, எலும்பு வளர்ச்சிக்கு அவசியம். வைட்டமின் 'ஏ' சத்து குறைபாட்டால் வறண்ட விழித்திரை, மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 முறை வைட்டமின் ஏ திரவம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான முகாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் மார்ச் 17 முதல் 22 வரை (புதன்கிழமை தவிர) நடக்கிறது. மாவட்டத்தில் 2,72,024 குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் அளித்து கண் பார்வை குறைபாடு இல்லாத இளைய சமுதாயத்தினரை உருவாக்க பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி