கோவை: ரங்கோலி கோலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு!

0பார்த்தது
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தைக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலம் அமைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று நேரில் பார்வையிட்டு, இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின்பேரில் கோவை மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற ஹெல்ப் லைனை தொடர்பு கொள்ளலாம் என்றும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உதவி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், வால்பாறை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி