கோவை: சைரன் சத்தத்தில் சிதறிய காட்டு பன்றிகள் – வீடியோ வைரல்

0பார்த்தது
கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள குப்பனூர் பகுதியில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான காட்டுப் பன்றிகள் கிராம விளைநிலங்களில் சேதம் ஏற்படுத்தின. விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, ரோந்து சென்ற வனத்துறையினர் ஜிப் வாகனத்தின் சைரன் ஒலியை எழுப்பி பன்றிக் கூட்டத்தை விரட்டினர். சைரன் சத்தம் மற்றும் வாகன இரைச்சலைக் கேட்டு பன்றிகள் விளைநிலங்களை விட்டு ஓடி, மீண்டும் அடர்ந்த வனப்பகுதியை நோக்கித் திசை திருப்பப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பான செல்போன் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தொடர்ந்து சேதம் விளைவிக்கும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி