கோவை: பெண் கடத்தல் - குடும்பத் தகராறு காரணம் - காவல்துறை!

1பார்த்தது
கோவை இருகூரில் பெண் கடத்தப்பட்டதாக நேற்று முன்தினம் இரவு வெளியான சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அது கடத்தல் அல்ல என்றும், பொருட்கள் வாங்குவது தொடர்பாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் என்றும் தெரியவந்துள்ளது. சாலையில் சென்ற ஒருவர் தவறாகப் புரிந்துகொண்டு தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது. 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், எந்தவித கடத்தலும் நடைபெறவில்லை என கோவை மாநகர காவல்துறை உறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட குடும்பத்தின் தனியுரிமைக்காக விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும், உண்மையை வெளிக்கொணர்ந்த அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி