திருப்பூரைச் சேர்ந்த வசந்தாதேவி (45) மற்றும் கீதா (50) ஆகிய இருவரும் கோவையில் ரயில் மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் வசந்தாதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கீதா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நீலிக்கோணாம்பாளையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர்கள், நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று சிங்கநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து திருப்பூர் செல்ல ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, கோவையில் இருந்து வந்த ரயில் ஒன்று இவர்கள் இருவர் மீதும் மோதியது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.