கோவை சிங்காநல்லூர் தொகுதியில்
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீநிதி கட்சியிலிருந்து விலகியதாக தமிழ்நாடு மகிளா
காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி தெரிவித்துள்ளார். ஆனால், இதை மறுத்த ஸ்ரீநிதி, எம். பி. ஜோதிமணியின் வேட்பாளர் தேர்வு முறைகேடு குறித்த பதிவுக்கு பதிலளித்து, தேர்வு குழு மற்றும் கட்சி தலைமையின் ஒப்புதலுடனே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். இதற்கு காயத்ரி கண்டனம் தெரிவித்து, ஸ்ரீநிதி மீது நடவடிக்கை எடுக்க மேலிடம் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.