கோவை: இளம்பெண் மின்சாரம் பாய்ந்து பலி

618பார்த்தது
கோவை: இளம்பெண் மின்சாரம் பாய்ந்து பலி
கோவை எல். எம். டபிள்யூ குடியிருப்பைச் சேர்ந்த நாகராஜ் மகள் மதுமிதா (21), ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கவுதமை காதலித்து 2022ல் திருமணம் செய்து கொண்டார். பணிக்கம்பாளையத்தில் வசித்து வந்த மதுமிதா, நேற்று காலை குளியலறையில் தண்ணீர் சூடாக்க ஹீட்டர் பயன்படுத்தியபோது, தண்ணீரை தொட்டுப் பார்த்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you