கோவை: எலக்ட்ரிக் கார் திருடிய வாலிபர் கைது

81பார்த்தது
கோவை: எலக்ட்ரிக் கார் திருடிய வாலிபர் கைது
கோவை திருச்சி ரோடு - சிங்காநல்லூரில் எலக்ட்ரிக் கார் ஷோரூம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் டெலிவரி இன்சார்ஜ் சரவணக்குமார் ஷோரூமில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 'ஸ்டாக்' ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் கார் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சம்பவ தினத்தன்று நைசாக அங்கு வந்த வாலிபர் ஒருவர் மாற்று சாவி போட்டு எலக்ட்ரிக் காரை திருடி சென்றது தெரிய வந்தது. தீவிர விசாரணையில், கார் திருடி சென்றது குனியமுத்துரை சேர்ந்த கர்ணன்(35) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி