கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பனின் மகன் தனுஷ் (வயது 22). சில நாட்களுக்கு முன்பு அவரின் தாய் மரணம் அடைந்தார். தாயை இழந்த துயரத்தால் மனமுடைந்த தனுஷ், வாழ்க்கையில் விரக்தியடைந்துள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று (ஜூலை 5) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.