கோவை: இளைஞர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்

1பார்த்தது
கோவை அரசு மருத்துவமனை முன்பு, பேருந்து மோதி உயிரிழந்த 19 வயது இளைஞர் கதிரேசனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் சேர்ந்த கதிரேசன், கடந்த 5ம் தேதி அரசு பேருந்து மோதி காயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். விபத்துக்கு பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்றும், தங்கள் புகாரை போலீசார் ஏற்கவில்லை என்றும், கதிரேசன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி நடத்திய மறியலை, போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி