கோவை: தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட இளைஞர்கள்

55பார்த்தது
கோவை, 100 அடி சாலையில் இருந்து நவஇந்தியா நோக்கி செல்லும் மேம்பாலத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பீர் பாட்டில்களுடன் சென்றனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வந்தவர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

 இதை அறிந்த காட்டூர் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மேம்பாலத்தில் ரகளையில் ஈடுபட்ட ராஜ்குமார், சுசீந்திரன் மற்றும் கௌதம் ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தாங்கள் செய்தது தவறு என்றும், எங்களால் பொதுமக்களுக்கு இடையூறு நடந்தது என்றும், இதுபோன்று இனி யாரும் செய்யக் கூடாது என்றும், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதாகவும் கைது செய்யப்படும்போது அவர்கள் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி