கோவை தொண்டாமுத்தூர் தென்னமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தூர் புது காலனி பகுதியில் உள்ள சமுதாயக் கூடம், இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. காலி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சிதறிக் கிடப்பதால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்த கூடம் அவதிக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் இன்று காவல் துறையிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளனர்.