மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்; ஆட்சியர் தகவல்

67பார்த்தது
மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்; ஆட்சியர் தகவல்
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக்டோபர் 5) நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வேலை வாய்ப்பு முகாம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் இளங்கலை மற்றும் முதுகலை தொழில்நுட்பக் கல்வி, பட்டப் படிப்பு, ஐடிஐ படித்தவர்கள் பங்கேற்கலாம். ஊரகம் மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயது வரையுள்ள படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவரக் குறிப்பு, புகைப்படம், இதர தகுதிச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் பங்கேற்பவர்கள் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு மற்றும் நேரடி வேலை வாய்ப்பு பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி