குனியமுத்தூர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

74பார்த்தது
குனியமுத்தூர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
கோவை மாவட்டம் குளத்துப்பாளையம், ஏரி அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் அடிப்படையில் நேற்று (டிச.26) சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஏரி அருகே இருக்கும் ஆலமரத்தின் அருகில் நான்கு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். விசாரணையில் அவர்கள் கோவை புதூர் முருகன்(38), சரவணன் (37), குணசேகரன் (40), மற்றும் குனியமுத்தூரை சேர்ந்த முனியப்பன் (46) என்பது தெரியவந்தது. 

நான்கு பேரையும் நேற்று கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 52 சீட்டுகள், மற்றும் 21 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி