மேட்டுப்பாளையம்: நினைவு நாள் போராட்டம்: 63 பேர் கைது

3பார்த்தது
மேட்டுப்பாளையம்: நினைவு நாள் போராட்டம்: 63 பேர் கைது
2019 டிசம்பர் 2 அன்று நடூர் ஏ. டி. காலனியில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தின் நினைவு நாள் நேற்று பல்வேறு அமைப்புகளால் அனுசரிக்கப்பட்டது. ஆதித்தமிழர் பேரவை மற்றும் திராவிடர் பண்பாட்டு கூட்டு இயக்கத்தினர் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வீடு, அரசுப்பணி வழங்க வேண்டும், வன்கொடுமை வழக்காக மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தினர். போலீசார் ஊர்வலத்தை தடுத்து 63 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி