மேட்டுப்பாளையம்: கடன் தொல்லையால் விசிக பிரமுகர் தற்கொலை

64பார்த்தது
மேட்டுப்பாளையம்: கடன் தொல்லையால் விசிக பிரமுகர் தற்கொலை
கோவை, பாரி கம்பெனி ரோடு, சாந்தி நகரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அருண்குமார் (37) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடன் தொல்லையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அருண்குமார், மது அருந்தும் பழக்கம் கொண்டவராகவும், அதிக கடன் தொல்லையில் சிக்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. டிசம்பர் 20 இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து நடந்த தேடலில், அவரது அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருண்குமாரை இழந்த குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி