பீளமேடு: மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

71பார்த்தது
பீளமேடு: மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
கோவை, பீளமேடு அருகே காந்திமாநகரில் உள்ள எப்.சி.ஐ. குடோனில் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது சலீம் (30) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

முகமது சலீம், சக தொழிலாளர்களுடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று அவர் அலுமினிய ஏணியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தூக்கிச் சென்றபோது, ஏணியின் மேல் பகுதி மின் கம்பியில் உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட முகமது சலீம் படுகாயமடைந்தார். 

உடனடியாக சக தொழிலாளர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 

எனினும், சிகிச்சை பலனின்றி முகமது சலீம் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி