கோவை மாவட்ட சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்புனர், நர்ஸ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நாளை நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட சுகாதார அதிகாரி பாலுசாமி தெரிவித்துள்ளார். இதனால், வேலை தேடும் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.