சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. டாஸ்மாக் பார் உரிமையாளர்களை அழைத்து கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரமாதேவி, உதவி ஆய்வாளர் யுவராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இரவு 10 மணிக்குப் பிறகு மது விற்பனை செய்தாலோ, பொதுஇடங்களில் சட்டவிரோதமாக விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று எச்சரித்தனர்.