பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ வக்கீலுக்கு உத்தரவு

1பார்த்தது
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ வக்கீலுக்கு உத்தரவு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் வாதாடிய சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகனை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.