கோவை மாவட்டம் செல்வபுரம், பொன்னைய ராஜபுரம் சாலையில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக செல்வபுரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான காவல்துறையினர், பொண்ணையரஜாபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். அப்போது மேரி (54) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
அவர் கடையிலிருந்து 10 தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மேரி நேற்று (அக்.,4) மாலை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.