கோவை மாவட்டம் திருச்சி சாலையில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொண்டனர். கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துறை செந்தமிழ் செல்வன், திமுக மாநில தீர்மான குழு செயலாளர் நா கார்த்திக் ஆகியோர் முகாமை பார்வையிட்டனர். இந்த முகாமில் மாநகராட்சி தலைவர், மாமன்ற உறுப்பினர், பகுதி செயலாளர்கள் மற்றும் மீனவர் அணி துணைத்தலைவர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.