கோவை: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு

403பார்த்தது
கோவை: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 26வது வார்டில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் முகாமினை பார்வையிட்டார். சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.