கோவை சூலூர் அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சூலூர் காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் தொகுக்கப்பட்டு வருவதால், விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.