கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து சீருடை பணியாளர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம், கோவை, உடுமலை கோட்டங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக வேலைச்சுமை, பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்காதது, எச்.ஆர்.டி. ஸ்வர்ணலதா மற்றும் கிளை மேலாளர் கோவிந்தராஜ் ஆகியோரை கைது செய்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தலைவர் குப்புசாமி, பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.