கோவையில் குட்கா விற்பனை; பெண் வியாபாரி 2 பேர் கைது

68பார்த்தது
கோவையில் குட்கா விற்பனை; பெண் வியாபாரி 2 பேர் கைது
கோவை புலியகுளம் ரெட்பீல்டு ரோட்டில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் ராமநாதபுரம் போலீசார் நேற்று சோதனை செய்தனர். அதில் புகையிலையை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அங்கிருந்த 5 கிலோ புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர் புலியகுளத்தை சேர்ந்த ராஜலட்சுமி(64) என்பவரை கைது செய்தனர். இதேபோல், கோவை நீலிகோணாம்பாளையம் காமாட்சியம்மன் கோயில் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த சுசீலா(60) என்பவரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி