கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி திடீர் சாவு

3பார்த்தது
கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி திடீர் சாவு
கோவை மத்திய சிறையில் கஞ்சா விற்பனை வழக்கில் விசாரணை கைதியாக இருந்த திருப்பூர் செங்குந்தபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (33) நேற்று உயிரிழந்தார். சிறையில் மயங்கி விழுந்த அவரை முதலில் சிறை ஆஸ்பத்திரிக்கும், பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you