நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாசர் (58). இவருடைய மகள் தர்ஷினி (22) கோவையில் உள்ள ராமலிங்கம் காலனி பகுதியில் தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தங்கி இருக்கிறார். சம்பவத்தன்று ஸ்ரீநிவாசன் தர்ஷினியை தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார், ஆனால் விடுதியில் இருந்தவர்கள் அவர் ஏற்கனவே வீட்டிற்குச் சென்றதாக கூறியுள்ளனர். ஆனால் தர்ஷினி வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்து அவருடைய தந்தை தெரிந்தவர்களிடம் விசாரித்தும் எந்தத் தகவலும் இல்லாததால், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.