கோவையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

0பார்த்தது
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு சென்னை புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை வழியனுப்ப ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். அவர் வருவதற்கு முன்பே நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என ஆதரவு முழக்கங்களை எழுப்பினர். இதனால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி