கோவை மாவட்டத்தில் காட்டு யானைகள், சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து மக்களை தாக்கி உயிரிழப்பு மற்றும் சேதத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, நாம் தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட வன அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை தவறிவருவதாகவும், பயிர் காப்பீடு வழங்கல், வேட்டை தடுப்பு காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், 2006 வன உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தல், வனப்பகுதியில் விலங்குகளுக்கான உணவு, தண்ணீர் வசதிகளை மேம்படுத்தல் போன்ற கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர். இந்த போராட்டத்தால் வன அலுவலக வளாகம் பரபரப்படைந்தது.