கோவை இருகூர் அருகே அத்தப்பகவுண்டன்புதூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மது பழக்கத்தால் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தினர். டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கையை அதிகாரிகளிடம் கொண்டு செல்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.