கோவை விளாங்குறிச்சி பகுதியில் கஞ்சா போதையில் இரண்டு நாய்க் குட்டிகளை கல்லால் அடித்து கொன்ற வாலிபர் ஜிஜூ விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். 45 நாட்கள் வயதான நாய்க் குட்டிகளை தாக்கும் காட்சிகள் சி. சி. டி. வி. யில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. விலங்குகள் வதை தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.