கோவையில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

68பார்த்தது
கோவையில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
கோவை ராமநாதபுரம் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் சங்கர்(18). இவர் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு உள் அலங்கார வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று சங்கர் தனது வீட்டருகே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த 2 வாலிபர்கள் சங்கரை மறித்து தகராறு செய்தனர். ஏன் பைக்கில்லாமல் நடந்து செல்கிறாய்? என கேட்டு கேலி செய்துள்ளனர். 

இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி சங்கரை அடித்து உதைத்தனர். பின்னர் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். இது குறித்து சங்கர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சங்கரை தாக்கியது ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த தாமோதரன்(20), அருணாச்சலம் காலனியை சேர்ந்த ஹரிஹரன்(22) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி