தென்மாநிலம் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நாளை முதல் 21ஆம் தேதி வரை இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நாளை பிற்பகல் 1.40 மணிக்கு துவக்கி வைக்கிறார். ஆந்திரப் பிரதேசம் புட்டபர்த்தியில் இருந்து தனியார் விமானத்தில் வரும் பிரதமர், கோவை விமான நிலையம் வந்தடைந்து, மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர் டெல்லிக்குப் புறப்படுகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர் முழுவதும் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.