கோவை: 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.. 2 பேர் கைது

173பார்த்தது
கோவை: 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.. 2 பேர் கைது
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். இடையர்பாளையம் அண்ணா நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மூன்று வாகனங்களை சோதனை செய்தபோது, 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கண்டறியப்பட்டன. அரிசி மூட்டைகள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட குணசேகரன் மற்றும் முகேஷ் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி