கோவை போத்தனூரில் நேற்று டிப்பர் லாரி டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்து, விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். அதிவேகமாக செல்லும் லாரிகளால் இதுபோன்ற விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி, உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.