கோவை: பழமையான மரம் விழுந்து விபத்து!

1பார்த்தது
கோவை ஆர்.எஸ். புரம் மெக்கரிக்கர் சாலையில் நேற்று சாலையோரத்தில் இருந்த பழமையான மரம் வேரோடு சாய்ந்து சரக்கு வாகனம் மீது விழுந்தது. இதில் வாகன ஓட்டுநர் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. தகவலறிந்து வந்த ஆர்.எஸ். புரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மரத்தை துண்டுகளாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பரபரப்பு நிலவியது.