கோவை: அங்கன்வாடி–சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

225பார்த்தது
காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் நிலைகளில் முறையே ரூ. 16,500 மற்றும் ரூ. 15,700 அடிப்படையில் காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், கோடை விடுமுறை, பிழைப்பூதியம், ஓய்வூதியம், அகவிலைப்படி, தேசிய மருத்துவ காப்பீடு, 12 மாத மகப்பேறு விடுப்பு போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 10 நாட்கள் போராடியும் அரசு செவிசாய்க்காததால் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதாக ஊழியர்கள் தெரிவித்தனர். மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், அரசியல் கட்சிகள் தங்களை பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி