கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலை விடுவிக்கப்பட்டதும் அவர்கள் செல்போனில் டார்ச் லைட் அடித்து மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். 10 ஆண்டு பணி முடித்தோருக்கு 50% பணி நியமனம், கோடை விடுமுறை பிழைப்பூதியம், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி, 12 மாத மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.