கோவை: இனியாவது ஏதாவது செய்யுங்கள் - எஸ்.பி. வேலுமணி!

55பார்த்தது
கோவை: இனியாவது ஏதாவது செய்யுங்கள் - எஸ்.பி. வேலுமணி!
கோவை, மேட்டுப்பாளையம் சாலை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடைபெற்று வரும் மேம்பால பணிகளை முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி நேற்று பார்வையிட்டார். மேம்பால பணிகள் எவ்வாறு செய்யப்படுகிறது என்னென்ன பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பது குறித்து நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

 அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், மக்களுடைய கோரிக்கையான இந்த பகுதியில் டிராபிக் ஏற்படக் கூடாது என்று தான் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது. ஆனால் இந்த பகுதியில் ரவுண்டானா மட்டும் அமைக்கிறார்கள், ஆனால் மக்களுடைய கோரிக்கை என்னவென்றால் இந்த பாலம் முருகன் மில்லில் தொடங்கி சி. டி. சி டெப்போ அருகில் முடிகிறது. ஆனால் அதனை சற்று நீட்டித்து சங்கனூர் சாலையை கடக்கும் வகையில் அமைக்க வேண்டும் என்று அதற்கு தற்போது திட்ட மதிப்பீடு 22 கோடி தயாரித்து உள்ளதாக தெரிகிறது. 

எந்த நிலையில் கடந்த காலத்தில் திட்டமிட்டபடி அன்னபூர்ண பகுதியில் இருந்து சங்கனூர் சாலையை கடந்து பாலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் அவ்வாறு இருந்தால் இப்பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் அவர்களின் இந்த 50 ஆண்டுகால பிரச்சனையும் தீரும், மேலும் இது ஊட்டி, மேட்டுப்பாளையம், மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாகும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. இனியாவது கோவைக்கு ஏதாவது செய்யுங்கள் என திமுக அரசை குறிப்பிட்டார்.